சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!
பொது நல வழக்குகளைத் தொடர்ந்து வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொது நல வழக்குத் தொடர்ந்து வரும் டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சேர்ந்தவர் டிராபிக் ராமசாமி. 82 வயதான இவர் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் பொது நல வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றவர். தோல்வியும் அடைந்திருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவை எதிர்த்து பல வழக்குகளை தொடர்ந்து அதிமுகவினரின் கோபத்தை சம்பாதிக் கொண்டவர் டிராபிக் ராமசாமி. அண்மையில் கூட ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை எழுப்பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

டிராபிக் ராமசாமி ஏற்கனவே உடல் நலக் குறைவு இருந்த போதிலும், சளைக்காமல் பொது நல வழக்குகளை தொடர்ந்து வந்த நிலையில், இன்று சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் கடைசியாக தாக்கல் செய்த ஜெயலலிதாவின் இறப்பு குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கூட அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications