அடிக்கடி அமைச்சர்கள் வர்றாங்க.. சசிகலாவை தும்கூருக்கு மாத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி!
தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.
பெங்களூர்: சொத்துக்குவிப்பு குற்றவாளியான, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தும்கூர் நகரிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் தனது கோரிக்கையில் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

தமிழக கோர்ட்டுகளில் பொது நல வழக்குகளை போட்டு பிரபலமான டிராபிக் ராமசாமி, தற்போது கர்நாடக ஹைகோர்ட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக சிறைக்கு மாற்றி கொண்டுவர ஆதரவாளர்கள் முயலுவதாக தகவல்கள் வெளியான நிலையில், பெங்களூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள தும்கூருக்கு அவரை மாற்ற டிராபிக் ராமசாமி மனு போட்டுள்ளார்.
அதேநேரம், பெங்களூர் விமான நிலையத்திலிருந்து தும்கூர் அருகாமையில்தான் இருக்கிறது என்பதால், இவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும், அமைச்சர்கள் சென்று பார்ப்பதை தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications