திருச்சியில் ஜெயலலிதாவை வாழ்த்திய பேனர்களை கிழித்து டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்
திருச்சியில்: திருச்சியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.
திருச்சி மாநகர் பகுதியில் அதிமுக சார்பில் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்த. 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தும் பல இடங்களில் அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
{
மேலும் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலைய சாலை மற்றும் கோவில் ராஜகோபுரம் செல்லும் வழி ஆகிய இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கத்திற்கு சென்றிருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திடீரென பேனர்களை கிழிக்க ஆரம்பித்தார். மேலும் பேனர்களை அகற்றக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் அங்குசாமி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீஸார், டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டிராபிக் ராமசாமியோ, மாநகராட்சி ஊழியர்களை உடனே வரவழைத்து டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் அங்கு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்தபேனர்கள் அகற்றப்பட்டன. இதனிடையே அங்கு வந்த அதிமுகவினர் அனுமதி பெற்று வைத்த பேனர்கள் ஏன் அகற்றப்பட்டன என கேள்வி எழுப்பினர். இதனால் டிராபிக் ராமசாமி மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால், அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications