அது என்ன ஸோம்பி.. எனக்குத் தெரிஞ்சது சோம்பேறிதான்.. போட்டுப் பொளக்கும் டிராபிக்!
சென்னை: கண்ணு ஆயிரம் பார்த்தாலும், காது ஆயிரம் கேட்டாலும், வாய் ஆயிரம் பேசினாலும்.. சிந்தனை மட்டும் எப்பவுமே சீரியஸ்தான்.. அதுதான் டிராபிக் ராமசாமியின் டிரேட் மார்க்.
இவருக்கு வக்கீல் நோட்டீஸோ, கோர்ட் நோட்டீஸோ அனுப்ப முகவரியே தேவையில்லை. சம்பந்தப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் கோர்ட்டுக்குப் பக்கத்தில்தான் எங்காவது உட்கார்ந்திருப்பார்.. அல்லது ஏதாவது ஒரு கோர்ட்டில் மக்களுக்காக வாதாடிக் கொண்டிருப்பார்.
சம்மன் எல்லாம் இவருக்கு சட்னி சாம்பார் மாதிரி.. நோட்டீஸ் எல்லாம் வரிக்கி ரொட்டி மாதிரி.. இவர் பார்க்காத சம்மனா, இவர் பார்க்காத நோட்டீஸா.. அப்படிப்பட்டவரைப் பிடித்து விகடன் சில கேள்விகள் கேட்டு சுவாரஸ்யமான பதில்களைப் பெற்றது. அது இதோ...

பூஷணோ.. விபூஷணோ!
நடிகர் ரஜினிகாந்த்-க்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விருதின் பெயர் என்ன?
ராமசாமி: பத்ம பூஷணோ பத்ம விபூஷணோ கொடுத்தாங்க. ரஜினி, சமூகத்துக்கு என்ன செஞ்சார்னு தெரியலை.

ஸோம்பி.. சோம்பேறி!
ஸோம்பி என்பதன் பொருள் என்ன?
ராமசாமி: ஸோம்பிக்கு அர்த்தம் சோம்பேறித்தனமாக இருக்கிறது. என் வாழ்க்கையில நான் எப்போதுமே சோம்பேறித்தனமாக இருந்தது இல்லை.

சீக்கிரம் உடைஞ்சுரும்
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை?
ராமசாமி: அஞ்சு கட்சிக் கூட்டணி வெச்சிருக்காங்க. நீங்க வேணும்னா பாருங்க. தேர்தல் நெருங்கும்போது இந்தக் கூட்டணி உடைஞ்சுரும். நாங்க 234 தொகுதிகள்லயும் போட்டியிடப் போறோம்.

நாடு கெட்டுப் போகுது
நடிகர் அஜித்தின் குழந்தைகள் பெயர் என்ன?
ராமசாமி: அஜித் தானே. இப்பகூட படம் ரீலிஸ் ஆனப்ப ரோடு முழுக்க பேனர்வெச்சு அட்டூழியம் பண்ணாங்க. சினிமாக்காரங்களால்தான் நாடு கெட்டுப் போகுது.

சீக்கிரமே ஜெயலலிதா சிக்குவார் பாருங்க
சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாகப் புகாரில் சிக்கிய முதலமைச்சர் யார்?
ராமசாமி: உம்மன் சாண்டிதானே? ஜெயலலிதாவும் சீக்கிரம் சிக்குவார் பாருங்க. என்ன அராஜகம் பண்றாங்க இங்க. இவங்க செய்யறது எல்லாம் அட்டூழியம். பாவம்... மக்களுக்குத்தான் எதுவுமே தெரிய மாட்டேங்குது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications