ஒரே கிராமத்தில் 19 பேர் பலி.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் நெஞ்சை உறைய வைக்கும் சோகம்
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விருதுநகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று வேலைக்குச் சென்றதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடும்பத்தினரை இழந்த உறவினர்கள் கண்ணீருடன் கூறுகையில், '10 பேர் பாக்குற இடத்துல 20 பேர் வேலை பார்த்தது தான் இதற்கு முக்கிய காரணம். சரியான விதிமுறைகளை பாலோ பண்ணாததால் இப்படி ஆகிவிட்டது" என்று கூறினர்.

உடல் கருகி பலி
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே முத்துமாணிக்கம் என்பவரது பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்கள், ஆண்கள் என 25 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு செயல்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்து குறித்து 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம், அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 19 பேர் உயிரிழப்பு
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. விருதுநகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று வேலைக்குச் சென்றுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று வேலைக்கு போவோம் என சென்றிருக்கிறார்கள்.
ஒரு அறையில் 4 பேர் இருக்க வேண்டும் என்றால் இங்கு 10 பேர் இருந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு அறையும் தனித்தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே பக்கத்து பக்கத்திலேயே இருந்தது. தூரம் தூரமாக இருந்திருந்தால் இவ்வளவு உயிர்கள் போயிருக்காது. 19 பேரை பறிகொடுத்த சேர்வைக்காரன்பட்டி கிராம மக்கள் கண்ணீருடன் கூறுகையில், "10 பேர் பாக்குற இடத்துல 20 பேர் வேலை பார்த்தது தான் இதற்கு முக்கிய காரணம். சரியான விதிமுறைகளை பாலோ பண்ணாததால் இப்படி ஆகிவிட்டது. அதிகாரிகள் அவ்வபோது வந்து ஆய்வு செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. வெடிபொருட்களும் அதிகமாக இருந்துள்ளது" என்று கூறினர்.
அதிக வெடிபொருட்கள் இருந்ததே
மேலும், அதிக வெடி பொருட்கள் மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் தான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்காததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது நீதிபதி, "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை?.. நிவாரணம் அளிப்பது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications