கனமழை காரணமாக இன்று 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் - தாம்பரம் ரயில் பாதைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வைகை,பல்லவன் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. ரயில்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் டிக்கெட் விலை 3 நாட்களுக்குள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
புதுச்சேரி - எழும்பூர் விரைவு ரயில்
காரைக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் பல்லவன்
மதுரை - சென்னை வைகை விரைவு ரயில்
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்
சென்னை எழும்பூர் - புதுச்சேரி பாஸ்ட் பாசஞ்ஜர்
இதேபோல், புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் இன்று பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். மேலும், சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் நாளை காலை 7.40 மணிக்குப் பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்பட வேண்டிய விஜயவாடா ஜன் சதாப்தி, நியூ ஜல்பைகுரி, அகமதாபாத் நவஜீவன், ஹவுரா கோரமண்டல், அந்தமான், புதுச்சேரி-புதுடெல்லி ஆகிய 6 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 7.40 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்படும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications