அடிக்கடி ஏற்படும் மின்பழுது...அதிகாரிகள் அலட்சியம் - முறிந்து விழுந்த மின்கம்பத்தால் 2 பேர் படுகாயம்
கோவை: கோவையில் மின்சார கம்பம் முறிந்து விழுந்ததால் மின்பழுதினை சரி செய்ய வந்த ஊழியரும், மூதாட்டி ஒருவரும் காயமடைந்தனர்.
கோவை வெள்ளக்கிணர் அம்பேத்கர் வீதியில் நேற்று மாலை மின்பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதை சரிசெய்ய அங்கு வந்த மின்வாரிய ஊழியர் அங்கமுத்து மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தின் அடிபாகம் முறிந்து அருகில் இருந்த பட்டியம்மாள் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் மின்கம்பத்தில் இருந்த ஊழியர் அங்கமுத்துவிற்கு கையில் காயம் ஏற்பட்டது மேலும் வீட்டிற்குள் இருந்த பட்டியம்மாளுக்கும் சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டின் மேற்கூரையின் ஓடுகள் மீது கம்பம் விழுந்ததில் கூரை சேதமடைந்தது.
இத்தகவல் அறிந்ததும் மின் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக மாற்று நடவடிக்கையை மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அம்பேத்கர் வீதியில் பல மின்கம்பங்கள் இதே போல் மோசமான நிலையில் இருப்பதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்து கொடுக்கவும் வீட்டின் உரிமையாளருக்கு உரிய நிவாராணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இல்லாவிட்டால் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications