அமைச்சருடன் நடத்திய பேச்சு மீண்டும் தோல்வி.. பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது

போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியந்துள்ளது. கோரிக்கைகளை ஏற்க அரசு மறுப்பதால் பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்றே வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள்பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Transport union executives talk with the Transport Minister is again failed

இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இன்று ஸ்டிரைக் முடிவுக்கு வருமா என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ஆனால் கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதனால் அறிவித்தப்படி நாளை முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அரசின் அடக்குமுறை நடவடிக்கையால்தான் இப்போதே வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். வேலைநிறுத்தம் உறுதியாகியுள்ளதால் நாளை அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+