சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு - மண்டை உடைப்பு - தடியடி!
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற மோதல், கல்வீச்சில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பதற்றத்தைத் தணிக்க போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.

பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாமல் வரும் 12 ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிமுகவின் தொழிலாளர் சங்கமான அண்ணா தொழிற் சங்கத்தினருக்கும், திமுகவின் தொமுச உள்ளிட்ட பிற கட்சி தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி கல்வீச்சு நடந்துள்ளது.
இரண்டு தரப்பாக மாறி தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் சராமாரியாக கல்வீசித் தாக்கிக் கொண்டனர். அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மோதலில் சேதப்படுத்தப்பட்டன. மூன்று தொழிலாளர்களுக்கு மண்டை உடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மோதலை தவிர்க்க அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனினும் அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications