3வது நாளாக நீடித்த “பஸ் ஸ்டிரைக்” – சென்னையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- கைது
சென்னை: தழிழ்நாட்டில் பேருந்துகள் வேலை நிறுத்தம் 3 ஆவது நாளாக தொடரும் நிலையில் சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 50 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக பதிலளிக்கக் கோரிக்கை விடுத்து இம்முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 12 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேருந்து ஊழியர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் போராட்டத்தினைக் கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு தொடர்ந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
