திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்: திமுக ஆதரவு
சென்னை: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்ற திராவிடர்
கழகத்தின் கோரிக்கைக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்று திராவிடர்
கழக தலைவர் கி.வீரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத்தார். இந்த நிலையில் இந்த கோரிக்கைக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு
உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்
கொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும்,
மாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என திமுக
தலைவர் கருணாநிதி தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு குரல் கொடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications