நீட்.. திருச்சியில் 8 நாட்களாக நீடித்த கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஸ்டாலின்
திருச்சி: அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 8 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருச்சி விஸ்வநாதம் அரசு கல்லூரி மாணவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பழச்சாறு கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மாணவர்களை சந்தித்து உண்ணா விரதத்தை கைவிடுமாறு கோரிக்கைவிடுத்திருந்தார்.

தலைவர்கள் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர் மாணவர்கள். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், வரும் 13ம் தேதி நீட்டுக்கு எதிராக நடைபெற உள்ள அனைத்துக் கட்சி போராட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் திமுகவினர் போராட்டங்கள் நடத்த வேண்டும். சமூக நீதி, மாநில உரிமையை காக்க நாம் முன்வர வேண்டும்.
உரிய அனுமதி பெற்று திமுகவினர் அறப்போராட்டம் நடத்த வேண்டும். அறப்போராட்டத்தில் ஈடுபடுவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications