வேனில் வேகமாக போன தனலட்சுமி.. சாக்குமூட்டையில் என்னப்பா அது..வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன திருச்சி
திருச்சி: சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அடித்தேன்.. பின்னர் 2 பேரும் கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என திருச்சி வெங்காய வியாபரி கொலை வழக்கில் அவரது மனைவி தனலட்சுமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். முறை தவறிய உறவும், மதுவால் ஏற்பட்ட வன்முறையும் கொலை வரை போய் உள்ளது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே வாசன்வேலியைச் சேர்ந்தவர் 44 வயதாகும் சிவலிங்கம் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை மேலூரை சேர்ந்த தனலட்சுமி(36) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்தார். வாசன்வேலி 10வது குறுக்குத் தெருவில் இவர்கள் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்கள்.

சிவலிங்கத்துக்கு குடிபழக்கம் உள்ளதாம். தினமும் மது குடித்துவிட்டு வந்து தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, தனது உறவினரான செந்தில்குமாரை(40) வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் சிவலிங்கத்தை அடித்துக் கொலை செய்தனர்.
பின்னர் தனலட்சுமியின் உறவினரான ஆறுமுகம்(55), அவரது மனைவி சுமதி(42) ஆகியோர் உதவியுடன், சிவலிங்கத்தின் உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிவு செய்தனர். இதன்படி சிவலிங்கம் உடலை மணப்பாறை பகுதிக்கு ஒரு வேனில் கொண்டு சென்றுள்ளனர்.
நவலூர் பகுதியில் சென்றபோது, அவர்கள் ராம்ஜிநகர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்கள். அப்போது செந்தில்குமார் தப்பியோடிவிட்டார். இதையடுத்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சோமரசம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வழக்கு பதிவு கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் தனலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் தனலட்சுமி கூறியதாக போலீசார் சிலதகவல்கள் வெளியிட்டனர். அதில் மதுரை மேலூரை சேர்ந்த பிரபு என்பவருக்கும் எனக்கும் (தனலட்சுமி) முறைப்படி கல்யாணம் நடந்தது.இவரும் சேர்ந்து வாழ்ந்தோம். எங்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனக்கும் பிரபுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டோம். இதனால் நான் என் மகளை மதுரை மேலூரில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறேன். இதனிடையே கணவனை பிரிந்த நான், எனது உறவினரான திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வெங்காய கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.
திருச்சி கருமண்டபத்தில் வெங்காய வியாபாரம் செய்த சிவலிங்கத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளான். இந்நிலையில் எனது 2-வது கணவரான சிவலிங்கம் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இது எனக்கு எரிச்சலாக இருந்தத. இது பற்றி நான் எனது உறவினர் செந்தில்குமாரிடம் கூறிய போது அவர் எனக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனால் எனக்கும், செந்தில்குமாருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பழக்கத்தை வளர்த்து வந்தோம்.
இதனிடையே சிவலிங்கம், விடுதியில் உள்ள எனது மகளை அழைத்து வந்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். மேலும் என்னை விபசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தினார். அத்துடன் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இது பற்றி செந்தில்குமாரிடம் தெரிவித்தேன்.

இதையடுத்து நேற்று முன்தினம் நானும் செந்தில்குமாரும் அவரிடம் பேசினோம். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அவரை ஓங்கி அடித்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து, கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.
பின்னர் இந்த கொலையை மறைக்க, சிவலிங்கத்தின் உடலை சாக்கால் மூடி இரும்பு கம்பியால் சுற்றிக்கொண்டோம். இந்த கொலை பற்றி எனது உறவினர் ஆறுமுகம், அவரது மனைவி சுமதி ஆகியோருக்கு தெரிவித்தேன். இதையடுத்து அவர்கள் உதவியுடன் ஒரு வேனில் பிணத்தை ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றோம். அங்கு ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, மணப்பாறை நோக்கி சென்றோம். அப்போது நவலூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது, அங்கு வந்த போலீசார் எங்களை பிடித்து விட்டார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications