திருப்பூர் அருகே ரயில் மோதி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஒற்றைக்கண் பாலம் பகுதியில், தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே சிக்னலுக்கான கேபிள் பதிக்கும் பணி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொங்கு மெயின் ரோடு அருகே நேற்று மதியம் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் தண்டவாளத்தில் சிக்னல் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில், தொழிலாளர்கள் மீது மோதியது.ரயில் மோதியதில் ஒப்பந்த தொழிலாளர்களான சின்னசாமி, சடையன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராமலிங்கம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ரயில்வே தண்டவாளத்தில் இருவர் உடல் சிதறி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications