நாயை காணோம்... கண்டுபிடித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு ட்விட்டிய த்ரிஷா - கலாய்த்த நெட்டிசன்ஸ்
நாயை காணோம் என்று நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: நாயை காணோம் என்றும் கண்டு பிடித்தால் ரூ. 10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என்றும் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது திரிஷாவின் தோழி வீட்டு நாயாகும்.
திரிஷா விலங்குகள் நல ஆர்வலர். அவரது தோழி வளர்த்து வந்த மஃப்பின் என்ற பெண் நாய் சில தினங்களுக்கு முன் தொலைந்து விட்டது.
நாயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும் என்று பதிவிட்டார்.

கண்டுபிடித்தால் பரிசு
திரிஷாவின் தோழி வளர்த்து வந்த இந்த நாய் அண்ணா நகரில் தொலைந்து போய் விட்டது. இந்த நாய் திரிஷாவிடம் அதிக அளவில் பாசமாக பழகுமாம். எனவேதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் திரிஷா.
|
நெட்டிசன்ஸ் கிண்டல்
இதனையடுத்து திரிஷாவை கலாய்த்து பலரும் பதிவிட்டனர். பப்பிம்மா வேட்புமனு நிராகரிப்பு. பப்பியை காணவில்லை என்று விளம்பரமா என்று கேட்டுள்ளார் ஒரு பதிவாளர்.
— Trisha Krishnan (@trishtrashers) December 5, 2017 |
போன் நம்பரில் அழைப்பு
இதனிடையே திரிஷாவின் ட்விட்டர் விளம்பரத்தில் ஒரு போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அது திரிஷாவின் நம்பர் என்று ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பு கொள்கிறார்களாம். அது திரிஷாவின் தோழி நம்பர் என்று தெரிந்த உடன் பலரும், திரிஷாவின் நம்பர் வேண்டும் என்று கேட்கிறார்களாம்.

தொடர் தொல்லை
நாயைப் பற்றிய தகவல் கிடைக்கும் என்றுதான் நம்பர் போடுகிறோம். ஆனால் பலரும் இது திரிஷாவின் நம்பராக இருக்கலாம் என்று நினைத்து பேசுகின்றனர். டார்ச்சராக இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார் நாயை தொலைத்தவர்.












Click it and Unblock the Notifications