For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழிசைக்காக கோனார் உரை வாங்க செல்லும் அதிவேக அதிரடி "தொண்டர்"

நடிகர் கமல்ஹாசனின் டுவீட்டுகளை படிக்க புதிதாக கோனார் உரை தேவைப்படுகிறது என்று தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசையை நெட்டிசன்கள் கலாய்த்து டிரோல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் டுவீட்டுகளை படிக்க முடியாததால் கோனார் உரை வேண்டும் என்று கூறிய பாஜக தலைவர் தமிழிசையை கலாய்த்து வைரலாகும் வீடியோ.

    ஆரம்பத்திலிருந்தே தமிழிசை எதை பேசினாலும் நம் நெட்டிசன்கள் பதில் கருத்துகளையும், நறுக் பதில்களையும் போட்டு விடுவர். இதனிடையே அண்மைகாலமாக கமல்ஹாசனை விடாமல் சீண்டி வருவது நெட்டிசன்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வேதனை அளித்தது.

     Trolls are roaming against Tamilisai for commenting Kamal hassan

    அன்றிலிருந்து அவர் நல்ல கருத்தை கூறினாலும் அதற்கும் மீம்ஸ்களை தெறிக்க விடத் தொடங்கினர். ஜெயலலிதா வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கமல் நேற்று டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

    அதுகுறித்து பாண்டி பஜாருக்கு இட்லி சாப்பிட வந்த தமிழிசையிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர் கமல்ஹாசன் கொடுக்கும் டுவீட்டுக்கு கோனார் உரை தேவைப்படுகிறது என்றார்.

    அவ்வளவுதான் காலையில் இருந்து மீம்ஸ்கள் தெறித்து கொண்டிருக்கின்றன. அதில் வித்தியாசமாக தமிழிசைக்காக கோனார் வாங்க அதிரடியாக செல்லும் தொண்டர் என்ற தலைப்பிட்டு ஒரு வீடியோ உள்ளது. அதில் இதே வேகத்தில் இவர் போனால் 2030-ஆம் ஆண்டில் உங்களுக்கு கோனார் கிடைக்கும். அதை படித்து தெரிந்து கொண்டு வந்து கமல் கருத்துக்கு பதிலளியுங்கள் என்பது போல் இருந்தது. இது தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Actor Kamalhassan tweets against TN government. To give a suitable reply Tamilisai says that to understand Kamal's tamil tweet we have to check in Konar guide. For this comment a video roaming in the social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X