பாஜகவை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா..... சன்னி லியோனை வச்சு போட்டோ ஷாப்பா பண்றீங்க ?

கேரளாவில் சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ் பேரணி புகைப்படம் என்று கூறிபாஜகவினர் பொய்யாக பரப்பினர். இதை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்த டி.ஆர்.பி ராஜா, போஸ்ட் எழுத

Subscribe to Oneindia Tamil

சென்னை :கேரளாவில் சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ் பேரணி புகைப்படம் என்று கூறி பாஜகவினர் பொய்யாக பரப்பினர். இதை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்த டி.ஆர்.பி ராஜா, போஸ்ட் எழுதி பாஜகவை கலாய்த்து இருந்தார்.

கேரளாவில் தற்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இணைந்து ஒரு வார நீண்ட பேரணியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கேரளாவில் பாஜக கட்சியின் பலத்தை அதிகரிக்க இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

TRP raja on the floor.... teased BJP's IT wing !

கேரளா பாஜக மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பாஜக நிவாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். முக்கியமாக அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். பெரிய அளவில் இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரணி பெரிய அளவில் நடந்தாலும் , கேரளாவில் பெரும்பாலான மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் ஒரு மொபைல் கடை திறப்பு விழாவிற்கு சன்னி லியோன் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ் பேரணி புகைப்படம் என போட்டோஷாப் செய்து பாஜக கட்சியினர் பரப்பி வருகின்றனர் .

இதை பார்த்த மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் , முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா, டிவிட்டரில் அந்தப் புகைப் படத்தை ஷேர் செய்து இருந்தார்.

மேலும் காவிகளும், போட்டோஷாப் பசங்களும் மறுபடியும் தங்கள் வேலையைக் காட்டி விட்டனர். இது கேரளாவில் சன்னி லியோனுக்கு கூடிய கூட்டம் '' என்று அந்தப் போஸ்டில் எழுதி இருந்தார். இந்த டிவிட் இன்று டிவிட்டரில் வைரல் ஆனது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+