உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் தனது மகன் நரேசுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக தஞ்சை மாவட்டம் கருப்பூரில் பெண் பார்த்த அவர் நேற்று நிச்சயதாத்தத்துக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் இரவு சுந்தரம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்கு திரும்பினார்.
நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது திருச்சி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதாக கார் மோதியது.இதில் சுந்தரம், அவரது சகோதரி மற்றும் 9 வயது சிறுவன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications