குஷ்பு இட்லி பார்த்திருப்பீங்க... சூடு பறக்கும் ட்ரம்ப் தோசை சாப்பிட்டீங்களா?
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பெயரில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்று தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: டொனால்ட் ட்ரம்ப் பெயரில் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள சுப்ரபா என்ற ஓட்டல்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்த்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர், வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்பின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள 'சுப்ரபா' ஓட்டல் ட்ரம்பின் பெயரில் தோசை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த தோசையின் விலை ரூ.50க்கு விற்பனையாகிறது. வாழை இலையில் மொறுவலாக செய்யப்பட்ட தோசையுடன், ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட சட்னி, சாம்பார் மற்றும் நெய் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த ஓட்டலை நடத்தி வரும் முகுந்த் தாஸ் கூறுகையில், 'ஒரு ஓவிய கலைஞராக இருந்தால் அவர்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து மாரியாதை செலுத்துவார்கள். நானோ ஓட்டல் உரிமையாளர். எனவே புதுவகை உணவை அறிமுகப்படுத்தி, அதற்கு தனக்குப் பிடித்த நபரான ட்ரம்ப் பெயரை வைத்துள்ளேன். முதலில் சூடு பிடிக்காத வியாபாரம் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 130 தோசைகள் விற்பனையாகிறது என்றார் அவர்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications