For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவு பெற்ற வேட்பாளராம் அஞ்சுகம் பூபதி... திமுகவினரின் 'டைமிங்' போஸ்டர்!

தஞ்சை திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சாவூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டிரம்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார்.

Trump supports Anjugam in Tanjore election?

தேர்தல் தேதி நெருங்குவதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், அஞ்சுகம் பூபதிக்கு வாக்களிக்கக் கோரி, ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் 'டிரம்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப், திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவு பெற்றவர் என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார்.

முன்னதாக அதிபர் வேட்பாளராக களமிறங்கிய ஹிலாரிக்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாழ்த்துக் கூறியிருந்தார். அந்த வாழ்த்தில் அவர், 'உலகில் உள்ள அனைத்து மகளிருக்கும் ஹிலாரி முன்மாதிரியாக திகழ்வார்' என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஹிலாரி தோல்வியடைந்துவிட, அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்று விட்டதால், அவரை திமுகவினர் உரிமை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A poster of American president Trump supporting Tanjore DMK candidate Anjugam Bhoopathi is viral now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X