எச். ராஜா தனது போக்கை இத்தோடு மாற்றிக்கொள்ளவேண்டும்.. டிடிவி தினகரன் கண்டனம்
பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எச்.ராஜா குறித்து தற்போது டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதில் ''சிலையாக மட்டுமில்லாமல், தமிழக மக்களின் சிந்தையிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் சமூக நீதியின் தலைமகன், பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் சிலை தமிழகத்தில் இடிக்கப்படும் என ஆணவத்தோடு கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றுள்ளார்
மேலும் ''பொறுப்பற்ற வகையிலும், முதிர்ச்சியற்ற தன்மையோடும் கருத்து சொல்லும் எச். ராஜா தனது போக்கை இத்தோடு மாற்றிக்கொள்ளவேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில், இனி யார் கருத்து சொன்னாலும் அவர்களை சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்.'' என்றுள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications