தினகரன் அணியினர் அதிமுக வேஷ்டி கட்டினால் உருவுங்கள் : அமைச்சர் மணிகண்டன் 'அதிரடி' பேச்சு
தினகரன் அணியினர் அதிமுக வேஷ்டி கட்டி இருந்தால் உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளார்.
Recommended Video

ராமநாதபுரம்: அதிமுகவிற்கு துளியும் தொடர்பில்லாத டி.டி.வி தினகரன் அணியினர் அதிமுக கரைவேஷ்டி கட்டி இருப்பதைப் பார்த்தால் அதை அங்கேயே உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் தொண்டர்களிடையே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

அங்கு கூடியிருந்த தொண்டர்களிடத்தில் அவர் பேசுகையில், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தினகரனை நம்பிச் சென்றவர்கள் குக்கர் தூக்க மட்டுமே லாயக்கு என்று விமர்சித்தார்.
மேலும், டி.டி.வி தினகரன் அணியினர் அதிமுக கரை வேஷ்டியையும் அதிமுக கொடியையும் பயன்படுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் துரோகிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அதிமுக கரைவேஷ்டியை டி.டி.வி தினகரன் அணியினர் யாராவது கட்டி இருப்பதைப் பார்த்தால், அதை அங்கேயே உருவுங்கள் என்றும் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications