ஆக. 14 முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அதிமுக கோஷ்டிகளும் இணைய டிடிவி தினகரன் கொடுத்த கெடு இன்றோடு முடியும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டிடிவி தினகரன் அறிவிப்பு என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளாரா அல்லது மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் குறித்து அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
ஆனால் பிரஸ் மீட் செய்யாத தினகரன், அறிக்கையொன்றை மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் வரும் 14ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும், 14ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தினகரன். ஆக. 23 - வடசென்னை வடக்கு மாவட்டம், ஆக. 29 - தேனி மாவட்டம், செப். 5 - கரூர் மாவட்டம், செப்.12-தஞ்சாவூர், செப்.23 நெல்லை, செப்.26 தருமபுரி, செப்.30 திருச்சி, அக்டோபர் 5 சிவகங்கை, என மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் தினகரன். இதன் மூலம் நாளை அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications