கருணாநிதி போல மிமிக்ரி! இல்லாத சனாதனம்- ஒழிக்க போகுதாம் திமுக! புல்போர்ஸில் பாஜக டோனில் தினகரன்!

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: தமிழ்நாட்டு மக்கள் முதலில் திமுகவைதான் ஒழிக்க வேண்டும்.. ஆனால் இல்லாத சனாதனத்தை ஒழிப்போம் என திமுக பேசுகிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

காவிரியில் நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பேசியதாவது:

TTV Dhinakaran slams Udhayanidhi Stalin on Sanatana Dharma

இன்றைக்கு விவசாயத்துக்கே தண்ணீர் கிடைக்காத நிலையில் 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை வரும் அளவுக்கு காவிரி பிரச்சனையில் அவர்கள் கோட்டைவிட்டு விட்டார்கள். தொழிலாளர்கள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை, ஆசிரியர்கள் பிரச்சனை, விலைவாசி உயர்வு இதை எல்லாம் திசை திருப்புவதற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் மகனை விட்டு சனாதனம் பற்றி பேச வைக்கிறார்.

சனாதனம் ஒழிப்பாம்.. சனாதனம் என ஒன்று இருக்கிறதா? என்பதே நமக்கு தெரியாது.. அதைப் போய் எப்படிங்க ஒழிக்க முடியும்? டெங்குவை ஒழிப்பது போல ஒழிக்கிறார்களாம்.. ஒழிக்கப்பட வேண்டியது முதலில் திமுகவைத்தான்.

திமுகதான் நம்மை மக்களை ஏமாற்றி வருகிறது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்தவரை மக்கள் அவர்களை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்கவில்லை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி செய்த புண்ணியத்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. கூட்டணி கட்சிகள் தயவில் திமுக ஆட்சியில் இருக்கிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. இன்றைக்கு பாஜகவுக்கு அஞ்சி கூப்பாடு போடுகிறது திமுக. சனாதனம் போன்ற கதைவிடுவது எல்லாம் தேவை இல்லை. யாருங்க உங்களிடம் சனாதனம் பற்றி கேட்டது? விவசாயிகள் தண்ணீர் கேட்டால் சனாதனம் பற்றி பேசுறீங்க.. நீங்க அதர்மிகளாச்சே.. தர்மத்தை பற்றி பேசலாமா? உங்க வீட்ல சனாதன தர்மத்தை ஒழிங்க..

திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். அவருடைய தம்பி எங்கே போனார் என்றே தெரியவில்லை. அதிமுகவில் இருந்தவர்.. அவரது நிலைமை ரொம்ப பாவமாக இருக்கிறது. சிட்டிபாபு முதல் திமுகவை நம்பியவர்கள் இன்று வீதிகளில் நிற்கிறார்கள். அடுத்தது சேகர்பாபுதானாம்.

எமர்ஜென்சியில் திமுகவினரை முட்டிக்கு முட்டி தூக்கி உள்ளே தூக்கி வைத்தது காங்கிரஸ். ஆனால் நேருவின் மகளே வருக! என கருணாநிதி வரவேற்று கூட்டணி வைத்தார். அதேபோல பண்டாரங்கள், பரதேசிகள் என கருணாநிதி பேசினார். ஆனால் அதே பாஜகவுடன் கருணாநிதியும் கூட்டணி வைத்தார். பின்னர் சோனியாவை ஏமாற்றி அங்கே போய் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொண்டது திமுக. ஆனால் 2016-ல் காங்கிரஸை நடுரோட்டில் நிற்க வைத்தது திமுக. அப்படி இருந்தும் காங்கிரஸுக்கு புத்தி வரலையே. இன்னமும் திமுகவை நம்புகிறது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+