அதிமுகவை அழிக்கவே ஓபிஎஸ் செயல்படுகிறார் - டிடிவி தினகரன் கடும் தாக்கு
சென்னை: திமுகவுடன் சில துரோகிகள் இணைந்து கொண்டு அதிமுக அரசை கவிழ்க்க நினைப்பதாகவும், அதிமுகவை அழிக்கவே ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவுடன் சில துரோகிகள் இணைந்து கொண்டு அதிமுக அரசை கவிழ்க்க நினைக்கின்றனர். அதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கின்றார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சொன்னதே ஓ.பன்னீர்செல்வம் தான். மேலும் முதல்வராகவும் பதவி ஏற்க வேண்டும் எனவும் அவர் தான் வற்புறுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையால் அதிமுக அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்க வேண்டும் என்றால் வழி தவறி சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். கடந்த 1999 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தை மாவட்ட செயலாளராக பரிந்துரைத்தது என் தவறு. என் தவறு. என் கண்பார்வையில் இருந்ததாலேயே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications