அதிமுகவை அழிக்க பி.எச்.பாண்டியனுடன் ஓபிஎஸ் சதி.. டிடிவி தினகரன் பரபரப்பு புகார்
ஓபிஎஸ், பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்க அவதூறு செய்திகளை மக்களிடம் பரப்பி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சிலர் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவைத் தொடர்ந்து, பி.எச்.பாண்டியன் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டார். இப்போது, அதே பி.எச்.பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அதிமுக எனும் இயக்கத்தை அழிக்க சதியில் ஈடுபடுகிறார்.
பி.எச்.பாண்டியனை போல் பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர். முதல்வர் பதவியில் தொடர முடியாமல் போனதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எதிர் காலத்தில் ஓ.பன்னீர்செல்வமும், பி.எச்.பாண்டியனும் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று கூறினார். தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
மேலும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தில் பொதுச் செயலாளர் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் தாம் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications