சசி சிறைக்கு போனால் நடராஜன் மட்டும் அல்ல.. 'குற்றவாளி' டிடிவி தினகரனும் முதல்வராகவே முடியாது!

சசிகலா சிறைக்கு போனால் அவரது கணவர் நடராஜன் மட்டுமல்ல அக்காள் மகள் தினகரனும் முதல்வராக முடியாது என்பதுதான் யதார்த்தம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா சிறைக்கு போனால் நடராஜன் மட்டுமல்ல அவரது அக்காள் மகனும் மாஜி எம்பியுமான டிடிவி தினகரனும் கூட முதல்வர் நாற்காலியில் அமரவே முடியாது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கூட்டுச் சதி செய்ததாக சசிகலாவுக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா சிறை தண்டனை விதித்தார். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.

இந்த விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலையில் இன்னும் ஒருவாரத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரெடியாகும் சசிகலா

ரெடியாகும் சசிகலா

இதனிடையே முதல்வர் நாற்காலியில் அமருவதற்கு ரெடியாகி வருகிறார் சசிகலா. உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தால் மேலும் ஒரு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும்.

குற்றவாளி நடராஜன்

குற்றவாளி நடராஜன்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடராஜனின் அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும் மறுத்துவிட்டது. இதனால் அவரால் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது.

தினகரனும் குற்றவாளி

தினகரனும் குற்றவாளி

சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டியில் முதல்வர் கனவில் இருப்பவர்களில் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரனும் ஒருவர். ஆனால் தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்மையில் இவ்வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட ரூ28 கோடி அபராதத்தை ரத்து செய்ய கோரி தினகரன் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதில் தினகரனுக்கு ரூ28 கோடி தண்டனை விதித்ததை ரத்து செய்ய மறுத்துவிட்டது நீதிமன்றம். ஆக தினகரனும் நீதிமன்றத்தால் குற்றவாளி என கருதப்படுவர்தான்.

தேடுதல் படலம்

தேடுதல் படலம்

அவராலும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட முடியாது; இதனால் மன்னார்குடி கோஷ்டி சர்ச்சையில் சிக்காத ஒருவரை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+