நீட்டுக்கு எதிரான நாளைய போராட்டம் ரத்து.. டிடிவி தினகரன் அறிவிப்பு
மதுரை: நாளை நடைபெறவிருந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக அம்மா அணி கைவிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அவர் கூறியதாவது:
Recommended Video


திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். நாங்களோ ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். உச்சநீதிமன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்துவிட்டதால் நாளை எங்களால் அதை நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டத்திற்கு பிரச்சினை இல்லை என நினைத்து திமுக அதை நடத்தியிருக்கலாம்.
தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது மத்திய அரசு. எனவே அவர்கள் அதை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
முதல்வரை மாற்றும் முதல்கட்ட நடவடிக்கைதான், ஆளுநருடனான எங்கள் சந்திப்பு. 21 எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை சந்தித்தேன். எடப்பாடி அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ளேன். ஆளுநர் மூலமாகத்தான் இதை செய்ய வேண்டும். எடப்பாடிக்கு பெரும்பான்மை இல்லை. அவர் இறுக்கமாக நாற்காலியை பிடித்து வைத்துக்கொண்டுள்ளார். அவரை தூக்கி எறியத்தான் ஆளுநரை சந்தித்தோம்.
ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நினைத்து காத்திருக்கிறோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications