டிடிவி தினகரன் கைதும்... சசிகலா பேனர்கள் அகற்றமும்... நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் #TTVDinakaran #sasikala
டெல்லியில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்குள்ளாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆ
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 4 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் டிடிவி தினகரன். அதிமுக அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்களை அகற்றுங்கள் என்ற ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிவிட்டது எடப்பாடி பழனிச்சாமி அணி.
நேற்று வரை சின்னம்மா என்றும் டிடிவி தினகரனை தியாகச் செம்மல் என்றும் கூறிகொண்டு வலம் வந்தவர்களின் உண்மையான முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது.
டெல்லியில் டிடிவி தினகரனை தூக்கிய அடுத்த 8 மணி நேரத்திற்குள்ளாக தலைமை செயலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்களை அகற்றியுள்ளனர். இன்றைக்கு ஊடகங்களுக்கு நல்ல எண்டர்டெயின்மென்ட். இன்றைக்கு சசிகலாவும், டிடிவி தினகரனும்தான் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
|
அங்க நிக்கிறார் எடப்பாடி
டெல்லியில் தினகரனை தூக்கினதும் அதிமுக தலைமை கழகத்திலேர்ந்து சசிகலா பேனரை தூக்கினார் பாருங்க. அங்க நிக்கிறார் எடப்பாடி என்று பழனிச்சாமியை பாராட்டியுள்ளார் ஒரு வலைஞர்.
|
தியாக செம்மல்
சிறையிலிருக்கும் சின்னம்மாவை சந்திப்பதற்காகவே சிறை சென்றுள்ள தியாகச்செம்மல்...! என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
யாரு டீ வாங்கி தருவாங்க
டிடிவி தினகரன் கைது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறினாலும், அட பாவத்தே இனிமேல் இவருக்கு யாரு டீ வாங்கி தருவாங்க என்று சோகமாக கேட்பது போல மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
தீக்குளிப்பு
தமிழக மக்கள் - டிடிவி தினாகரன கைது பண்றாங்க இன்னைக்கு எத்தன மானஸ்தன் தீக்குளிக்க போறாங்களோ!? என்று வடிவேலு படத்தைப் போட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
|
நல்ல எண்டர்டெயின்மெண்ட்
டெல்லியில் தினகரன் கைது, சென்னையில் சசிகலா பேனர்கள் அகற்றம் என பல நிகழ்வுகளினால் நல்ல பொழுது போக்கு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
நின்னு கொல்லும்
தெய்வம் நல்லா வெச்சி செஞ்சிருச்சி . தெய்வம் நின்று கொல்லும்னு சும்மாவா சொன்னாங்க
|
சசிகலா தினகரன் அதிமுக உதயமா?
சசிகலா தினகரன் அதிமுக உதயம்..??? பொதுச்செயலாளர் நாஞ்சில் சம்பத்?!?!? மனுஷன் என்னாஆஆஆஆஆ உண்மையா இருக்காரு என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.












Click it and Unblock the Notifications