உங்களுக்கு பணம் தந்தேனா.. டிவி சேனல் முன்னிலையில் வாக்காளர்களிடமே கேட்ட தினகரன்.. வந்த பதில் இதுதான்
Recommended Video

சென்னை: நான் உங்களுக்கு பணம் கொடுத்தேனா, என மக்களை பார்த்து டிடிவி தினகரன் கேட்க, அதற்கு அவர்கள் இல்லை என பதில் அளிக்க ஆர்.கே.நகரே அள்ளு தெறித்த காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
டிடிவி தினகரன் தரப்பில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் மத்தியில், ஆளும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பதிலுக்கு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்று ஆர்.கே.நகரில் சில தினங்கள் முன்பு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தினகரனிடம் கேள்வி எழுப்பியது.

அதே இடத்தில் கேள்வி
பிரசார வாகனத்தில் வைத்து தினகரனிடம் பெண் பத்திரிகையாளர் இந்த கேள்வியை எழுப்ப, அசராத தினகரன், மக்களிடமே உங்கள் முன்னிலையில் கேட்கிறேன் என கூறி, எந்த வித முன் ஒத்திகையும் இன்றி திடீரென உங்களுக்கு நான் பணம் கொடுத்தேனா என கேட்க மக்களோ இல்லை என கத்தி கோஷமிட்டனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிதான் பணம் தந்ததாகவும், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் தினகரன் குற்றம்சாட்டுவதை போல வீடியோ நிறைவு பெறுகிறது.
|
வைரலாகும் வீடியோ
தினகரனின் இந்த அரசியல் அதிரடியை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். அதிமுகவுக்கு சரியான போட்டி இவர்தான் என்று புகழாரம் சூட்டி, அந்த வீடியோவை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள். சிலரோ இதுபோன்ற திறமையானவர்களை, இதனால்தான் ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார் எனவும் விமர்சனம் செய்துள்ளனர்.
|
அசால்ட்டா அடிக்கிறாரு
இப்போ தான்யா புரியுது அந்த உத்தமி ஏன் கட்சில ஒதுக்குச்சுனு அசால்டா அடிக்கிறார் பாரு டைமிங் பதில். இவ்வாறு கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
எனக்கே பார்க்கனும் போல இருக்கு
யாரு சார் இவரு எனிக்கே இவரே பாக்கேனும் போல இரிக்கே! என்று சினிமா டயலாக்கை வைத்து புகழ்கிறார் இவர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications