என்னிடம் வீடியோ இருந்தது முதல்வர், அமைச்சர்களுக்குத் தெரியும்... தினகரன் பரபர!
என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது எடுத்த வீடியோ இருப்பது முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்குத் தெரியும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது எடுத்த வீடியோ இருப்பது முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்குத் தெரியும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போதே இந்த வீடியோவை வெளியிடுமாறு அவர்கள் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளை வெளியிட்டது குறித்து டிடிவி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : இன்று எங்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, மதுசூதனன் உள்பட அனைவருமே சசிகலா மீதான களங்கத்தை துடைக்க ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் சசிகலா அதற்கு ஒப்புகொள்ளவில்லை, நாம் தவறு செய்யவில்லை மக்கள் அதை புரிந்து கொள்வார்கள் என்றே கூறினார்.

பிப்ரவரி மாதத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா பெங்களூரு செல்ல நேரிட்ட போது தான், அவரிடம் அந்த வீடியோ வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். அது நம்முடைய கையில் இருக்கட்டும் ஏதோ ஒரு காலத்தில் உதவும் என்று வாங்கி வைத்திருந்தேன்.
கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று சசிகலாவிடம் என்னைப் பல முறை அனுமதி கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் நைட்டியில் இருக்கிறார் அந்த வீடியோவை வெளியிட மனதில்லை என்று பலமுறை சொல்லி விட்டோம்.
பிப்ரவரி மாதம் கடைசியில் இந்த வீடியோவை வாங்கி வைத்திருந்தேன். அப்போது வந்த இடைத்தேர்தலில் கூட இப்போது அமைச்சராக இருக்கும் பாண்டியராஜன் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்தார், அப்போதே அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று அதிமுகவினர் கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைவருக்குமே என்னிடம் வீடியோ இருப்பது தெரியும். நாங்கள் அனைவரும் ஒன்றாக போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்போது இதையெல்லாம் காட்டித் தான் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் கூறிவிட்டேன்.
என்னுடைய உறவினர் ஜெயானந்த் ஜெயலலிதாவின் வீடியோ இருப்பதாக சொன்னதன் அடிப்படையில் ஊடகங்கள் கேட்டதற்கு ஆம் எங்களிடம் வீடியோ இருக்கிறது என்பதை ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆனால் அதை எப்போதுமே பொதுவெளியில் வெளியிட நான் விரும்பவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications