போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது ஜெ.வின் ஆன்மாவுக்கு துரோகம்: தினகரன் திடீர் பதற்றம்
போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
போயஸ்கார்டனில் உள்ள பூங்குன்றனின் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு டிடிவி தினகரனி டிவிட்டர் வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
செய்யக் காத்திருக்கிறார்கள்..?
தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..? என்றும் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
ஜெ.ஆன்மாவுக்கு துரோகம்
போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என்றும் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
|
எடப்பாடியின் துரோக அரசு
அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசி குடும்பத்தை அசிங்கப்படுத்த
முன்னாள் எம்எல்ஏ விபி கலைராஜனும் வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் கலைராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெ.பெயரை கெடுக்க
வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் பெயரை கெடுக்கவே இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஒரு குடும்பத்தை குறிவைத்து
வருமான வரித்துறை சோதனைகள் தமிழக மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஒரு குடும்பத்தை மட்டும் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது என்றும் விபி கலைராஜன் குற்றம்சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications