தேய்பிறை அஷ்டமியில் வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜை செய்த டிடிவி தினகரன்
கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர டிடிவி தினகரன் பிரான்மலையில் உள்ள வடுகபைரவருக்கு சத்ரு சம்ஹாரபூஜை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தேய்பிறை அஷ்டமி நாளில் பிரான்மலையில் உள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹாரபூஜையை செய்துள்ளார் டிடிவி தினகரன். இதன்மூலம் எதிரிகளின் தொல்லைகள் இல்லாமல் போகும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
டிடிவி தினகரன் கடந்த 14ஆம் தேதி மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தினார். உடனே சென்னை திரும்பவில்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த தினகரன், நேராக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற தினகரன் அங்குள்ள வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார யாகம் செய்தார். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு யாகம் செய்தால் எதிரிகள் தொல்லை ஒழியுமாம்.

கோவில் கோவிலாக யாகம்
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், தற்போது கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார். கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக இறங்கி வருகிறார்.

மூக்குப்பொடி சித்தர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓரக்கண்டியம்மன் கோவிலுக்கு போய் பூஜை செய்து யாகம் நடத்தினார். கடந்த வாரம் திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சித்தரை தரிசித்து ஆசி பெற்றார்.

எதிரிகள் தொல்லை நீங்கும்
கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் எதிரிகள் தொல்லை நீங்கவும் இப்போது தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு யாகம் நடத்தியுள்ளார் டிடிவி தினகரன்.

தஞ்சையில் சிறப்பு பூஜை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரபல கோவில்களில் டிடிவி தினகரன் சிறப்பு பூஜைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு முன்பாகவே கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் தினகரன் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications