நாஞ்சில் சம்பத் விலகியதால் இழப்பு இல்லை.. டிடிவி தினகரன் பொளேர்
நாஞ்சில் சம்பத் கூறுவதை என்னால் ஏற்க முடியாது என்று தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: எனது அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவை மீட்பதற்காக கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை தினகரன் தொடங்கினார். இதன் கொடி கருப்பு, வெள்ளை, சிகப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்து காணப்படுகிறது.
இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், தினகரன் தொடங்கிய அரசியல் அமைப்பில் அண்ணா திராவிடம் இல்லை என்பதை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்.

தினகரன் விளக்கம்
தினகரனின் அரசியல் அமைப்பின் பெயரில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்பில்லையா
அப்போது அவர் கூறுகையில், திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லாதது போல் பேசுகிறார்.

திராவிடம் பேசி
சங் பரிவார் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே திராவிடம் பேசி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாஞ்சில் விலகியது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர் விலகியதால் யாருக்கும் இழப்பில்லை.

நீதிமன்றம் அனுமதி
தமிழிசையை விமர்சித்து குறித்து நான் கேட்டதிலிருந்து நாஞ்சில் என்னிடம் சரியாக பேசுவதில்லை. கட்சியின் பெயரை காரணமாக கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம் அளிக்கிறது. கட்சியின் பெயரில் திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் திராவிடம் இருந்தது, அவை எங்களுக்கு கிடைக்கவில்லை. குக்கர் சின்னம் கிடைக்க எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது.

கொடிக்கு சம்பந்தமில்லை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு இடைக்கால ஏற்பாடுதான். அதிமுகவின் கொடிக்கும் எங்கள் கொடிக்கும் சம்பந்தமில்லை. திமுகவினர் கொடியில் கூடதான் கருப்பு, சிகப்பு உள்ளது. அதற்காக அந்த இரு கொடிகளும் ஒன்று என்று சொல்லிவிடமுடியுமா என்று கேள்வி எழுப்பினார் தினகரன்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications