புதுக் கொடியுடன் மனுத் தாக்கல் செய்ய வந்த தினகரன்.. நடுவுல அண்ணாவைக் காணோம்!!!
அண்ணா உருவம் இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு கொடியுடன் டிடிவி தினகரன் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
Recommended Video

சென்னை: அண்ணா உருவம் இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு நிறங்களுடன் கூடிய கொடியுடன் டிடிவி தினகரன் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தினகரன் மனுத்தாக்கல்
இவர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனும் இன்று மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலை முன்னிட்டு டிடிவி தினகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அண்ணா உருவம் இல்லாத கொடி
தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அண்ணா உருவம் இல்லாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் இருந்த புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார்.

அதிமுக கொடியில்..
அவரது ஆதரவாளர்களும் இந்தக்கொடியை கைகளில் வைத்திருந்தனர். அதிமுக கொடியில் அண்ணா உருவம் மற்றும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருக்கும்.

சுயேட்சையாக தினகரன்
இரட்டை இலைச்சின்னம் மற்றும் அதிமுக கொடியை தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கியுள்ளது. இதனால் டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications