ஜெயலலிதா சமாதியில் தடுமாறி விழப்போன தினகரன்... தாங்கி பிடித்த கலைராஜன்
ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தினகரன் தடுமாறி விழப்போனார்.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த டிடிவி தினகரன் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தடுமாறி விழப்போனார். அவரை கலைராஜன் தாங்கிப் பிடித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காலையில் முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் பேரணி நடைபெற்றது. கறுப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினர். உறுதிமொழி எடுத்தனர்.

திறந்த வேனில் தினகரன்
ஆளும் கட்சி அளவிற்கு இல்லாவிட்டாலும், தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை நோக்கி திறந்த வேனில் பேரணியாக சென்றார். இதனால் அண்ணாசாலை, வாலாஜா சாலை போக்குவரத்து நெரிசலில் திணறியது.

தாங்கிப் பிடித்த கலைராஜன்
தினகரன் ஆதரவாளர்களின் கூட்டம் அதிகரிக்கவே அனைவரும் நினைவிடத்திற்குள் விட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் வந்தார். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவே தினகரன் தடுமாறினார். அவரை கலைராஜன் தாங்கிப் பிடித்தார். ஒரு ஆதரவாளர் கீழே விழுந்தார்.

பின்தங்கிய செந்தில் பாலாஜி
தினகரனுடன் அருகில் நின்று ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்துவது யார் என்பதுதான் பலருக்கும் ஆர்வமாக இருக்கிறது. இதில் பின்னால் இருந்து முன்னாடி வந்தார் தங்க தமிழ் செல்வன். ஆனால் செந்தில் பாலாஜி எம்எல்ஏ பின்தங்கி விட்டார்.

நெரிசலில் சிக்கிய சென்னைவாசிகள்
ஜெயலலிதா நினைவு தினமான இன்று காலை முதலே மெரீனா கடற்கரை சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முதல்வர் துணைமுதல்வர் பேரணி வந்தபோது அண்ணாசாலை, வாலாஜா சாலை தடுமாறியது. பிற்பகலில் தினகரன் பேரணி வந்த போதும் போக்குவரத்து நெரிசலில் சென்னைவாசிகள் சிக்கி தவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications