தினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!!
டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல அவர் சசிகலா புஷ்பாவின் விசுவாசி சரமாரியாக தாக்கியுள்ளார் அமைச்சர் சி விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல அவர் சசிகலா புஷ்பாவின் விசுவாசி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரியாக விளாசியுள்ளார்.
புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
அப்போதுபேசிய அவர் திமுகவையும் டிடிவி தினகரனின் அமமுகவையும் சரமாரியாக விளாசினார். அமைச்சரின் பேச்சு கூட்டத்தில் அனலை கிளப்பியது.

சசிகலா புஷ்பாவின் விசுவாசி
அவர் பேசியதாவது, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல , அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி. சசிகலாவின் விசுவாசியாக இருந்திருந்தால் ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா போட்டோவை பேனரில் போட சொல்லியிருப்பார். ஆனால் பேனரில் சசிகலா போட்டோவை போடக்கூடாது என்றல்லவா கூறினார்.

கூடவே வைத்துள்ளார்
தினகரன் சசிகலா புஷ்பாவின் விசுவாசியாக இருப்பதால் தான் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டிய சசிகலா புஷ்பாவை கூடவே வைத்துள்ளார்.

தினகரனுக்கு சவால்
நெஞ்சிலே வஞ்சத்தை வைத்துக் கொண்டு விஷத்தை கக்குகிறார் டிடிவி தினகரன். புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் என்று தொடங்கி பிறகு திருத்திக் கொண்டு என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா..? சவால் விட்டு கேட்கிறேன் மணல் கார்த்திகேயனையும் ஓடிப்போன ரத்தினசபாபதியை ஒருபக்கமும் பாதுகாப்புக்காக வைத்து கொண்டு டிடிவி பேசுகிறார்.

பதுங்கு குழியில் இருந்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர், டிடிவி தினகரன். 10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், டிடிவி தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி - டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.

ஸ்டாலின் ராஜினாமா
இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு பொறுப்பேற்று, மு.க. ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications