ஜெயக்குமார், டிடிவியின் அடுத்த லெவல் அட்டாக் பேச்சுகள்.!
தமிழக அமைச்சர்கள் அனைவரும் பைத்தியங்கள் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழக அமைச்சர்கள் அனைவரும் பைத்தியங்கள் என்று ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தினகரனுக்குத் தான் கட்சி, பதவி இல்லை என்ற பைத்தியம் பிடித்துவிட்டதாக பதிலடி தந்துள்ளார்.
அதிமுகவினருக்கும், டிடிவி. தினகரனுக்குமான விமர்சனங்கள் ஆட்சி சரியில்லை மக்களின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்று தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இந்த அரசியல் பேச்சுகள் தற்போது வேற லெவலை எட்டியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் வழக்கம் போல அமைச்சர்களை விமர்சித்து கருத்துகளை கூறினார். நடராஜனுக்கு சிகிச்சை அளித்தது போல ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்திருந்தால் அவர் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது குறித்து பதில் அளித்தார். ஜெயலலிதாவிற்கு தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை மக்கள் நன்று அறிவார்கள் என்றார்.

கீழ்ப்பாக்கம் போக வேண்டியவர்கள்
தொடர்ந்து அரசையும் அமைச்சர்களையும் தினகரன் விமர்சித்தார். அமைச்சர்கள் யாருமே சாதாரணமாக இல்லை என்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் அனைவரும் கோமாளிகள் என்று நினைத்தேன், ஆனால் இவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கத்திற்கு போக வேண்டியவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் போக வேண்டி வரும்
6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழ்ந்துவிடும். 6 மாதத்திற்குள் அமைச்சர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்க வேண்டிய நிலைக்கு போவார்கள் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
டிடிவி. தினகரனின் இந்த பேச்சுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு என்ற பாடல் தான் டிடிவி. தினகரனுக்கு பொருந்தும்.

கட்சியில்லை என்ற பைத்தியம்
கட்சியில்லை என்ற ஒரு பைத்தியம், பதவி இல்லை என்ற ஒரு பைத்தியம் அந்த பைத்தியத்திற்கு பார்ப்பதெல்லாம் பைத்தியமாகத் தான் தெரியும். அந்த பைத்தியம் சொல்வதை போகட்டும் விட்டுவிடு என்று தான் விட்டுவிட வேண்டும் அதை பெரிதாக நினைக்கக் கூடாது என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மோசமாகி வரும் விமர்சனங்கள்
இதுவரை எதுகை மோனை விமர்சனங்களாக இருந்த இவர்களின் அரசியல் தடாலடிகள் தற்போது எல்லையை மீறி பைத்தியம் என்ற அளவில் விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது. டிடிவி. தினகரன், ஜெயக்குமாரின் இந்த பேச்சுகள் அரசியல் அரங்கில் தலைவர்களின் பேச்சுகள் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications