நான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட வழக்கு தொடரப்படலாம்: டிடிவி தினகரன் நக்கல்
தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது தேச விரோத வழக்கு போடும் அளவிற்கு என் மீது எந்த புகாரும் இல்லை என்று அவர் கூறினார்.
தேச விரோத வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தினகரன் தெரிவித்தார். எதிரிகள் தானாக வந்து எங்களிடம் மாட்டுகிறார்கள் என்ற அவர் இதற்கு முன்ஜாமின் எல்லாம் வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தினம் ஒரு வழக்கு தொடர்வார்கள்
இவர்கள் அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக தினம் ஒரு வழக்கு தொடர்வார்கள் என்ற அவர் இந்த ஆட்சி முடிய போகிறது என்றார். போலீசார் சட்டத்திற்கு புறம்பாக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என்ற டிடிவி தினகரன் அதனை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன் என்றும் கூறினார்.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது
நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் மாற்றப்படும்
என் மீது பொய் வழக்கு தொடர்வதை நிரூபிப்பேன் என்ற அவர் அதற்கு காரணமானவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்றும் எச்சரித்தார். தன்மீது வழக்கு தொடர்ந்தவர்கள் மீது கோர்ட் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிச்சயம் அரசாங்கம் மாற்றப்படும் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

கொசுக்களை தூண்டிவிடுவதாக
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறதா என்பது மக்களுக்கு தெரியும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். அப்போது
தான் தூண்டிவிட்டதாலேயே டெங்கு கொசு மக்களை கடிப்பதாகக்கூட தன் மீது வழக்கு தொடரப்படலாம் என டிடிவி தினகரன் நக்கலடித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications