முதலில் சுற்றுப்பயணம்... அப்புறம்தான் தலைமைக் கழகம்.. டிடிவி தினகரனின் தில் மூவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் தனக்கு இருக்கும் ஆதரவை முழுமையாக நிரூபிக்க மாவட்ட அளவிலான சுற்றுப்பயணத்தை செய்துவிட்டு, அதன்பிறகு தலைமைக்கழக அலுவலகம் செல்வதென டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில், ஓபிஎஸ் அணிகள் ஈபிஸ் அணிகள் இணைய வாய்ப்புகள் இல்லை என்று அடிமட்ட அதிமுக தொண்டர்கள் வரை தெளிவாக இருக்கிறார்கள். இதனால் அணிகள் இணைய எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்ந்த தினகரன் தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

TTV Dinakaran plans to District level Political tour says his supporters

இது தொடர்பாக அதிமுக சீனியர்கள் சிலர் கூறுகையில், " டிடிவி இல்லாமல் இப்போதைய பெரும்பாலான அதிமுக பிரதிநிதிகள் இல்லை. இது கடந்த 1991 முதல் அதிமுகவில் இருக்கும் பெரிய தலைகளுக்குத் தெரியும். அதனால் அவர் தலைமைக் கழக அலுவலகம் செல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

ஆனால், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தனது பலத்தை அதிமுக ஆதரவாளர்களைக் காட்டிய பிறகே அலுவலகம் செல்ல அவர் முடிவு செய்துள்ளார். இதனால் மட்டுமே அவரின் முக்கியத்துவத்தை முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வருக்கு உணர்த்த முடியும் என்று நினைக்கிறார்.

Egmore Court Has Filed Charges Against TTV Dinakaran in FERA Case | Oneindia Tamil

இன்றோடு டிடிவி தினகரன் கொடுத்த அணிகள் இணைப்புக்கான கெடு முடிகிறது. அதனால் அடுத்த அவர், சுற்றுப்பயண திட்டத்தில் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணம் ஒன்றுதான் தினகரன் பலத்தைக் காட்ட வழி" என்று தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran Supporters said, He has planned District level Political tour all over Tamilnadu.
Please Wait while comments are loading...