பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா...? தினகரன் லாஜிக்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் கூட்டிய கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? இல்லையா? என்பது செப்டம்பர் 23தான் தெரியும் என தினகரன் கூறினார்.

அதிமுக அம்மா அணியும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அருகே வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அந்த பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 TTV Dinakaran reacted to General council meeting of OPS and EPS team

இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இது பொதுக்குழு கூட்டம் அல்ல, பொதுக்கூட்டம். இந்த பொதுக்கூட்டத்தில் என்ன தீர்மானங்கள் வேண்டுமானாலும் நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த தீர்மானங்கள் அனைத்தும் செல்லுமா? இல்லையா? என்பது ஏற்கனவே இந்த பொதுக்குழு கூட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் அக்டோபர் 23ஆம் தேதி வரும் போது நீதிமன்றம் தெரிவிக்கும் என கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran reacted to General council meeting of OPS and EPS team. And he told that all resolution passed in that meeting are valuable or meaningless, will be decided by the court

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற