தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள்- எடப்பாடிக்கு அமைச்சர்கள் ஆதரவு- அதிமுகவில் அடுத்த 'டமால்' ரெடி
டி.டி.வி. தினகரன் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. வெற்றிவேல் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் அரசு மீதும் வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ள விவகாரம் அதிமுகவில் நிலவும் உச்சக் கட்ட குழப்பத்தை வெளி
சென்னை: நமது எம்ஜிஆர் நாளிதழை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமாருக்கு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கடும் எதிர்ப்புக் காட்டியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசுக்கு எதிராகவும் மோடியை கடுமையாக விமர்சித்தும் வெளியாகி இருக்கும் கருத்துக்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒரு பத்திரிகையின் கருத்து தான் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையானபிறகும் டி.டி.வி. தினகரனை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசை அவர் இயக்குவதாக கூறுவதும் தவறு என்றும் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இதற்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளிவந்துள்ள கருத்துக்கள் அ.தி.மு.க.வின் கருத்துக்கள் இல்லை என்று கூறுவதற்கு ஜெயக்குமார் யார்?

ஜெயக்குமார் மறுப்பாரா?
ஜெயக்குமார் கட்சி பதவிக்கு வந்த போதும், எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டபோதும், அமைச்சராக அறிவிக்கப்பட்ட போதும், நமது எம்.ஜி.ஆரில் தான் அவரது பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. இதனை ஜெயக்குமார் மறுப்பாரா? தினகரன் பற்றியும் ஜெயக்குமார் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதுவும் கண்டிக்கத்தக்கது.

தினகரன்தான் து.பொ.செ.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவே நீடிக்கிறார். துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி கட்சி பணியை தொடங்க உள்ளார். கட்சியை அவர்தான் வழி நடத்தி செல்வார்.

எடப்பாடி முதல்வர்தான்
அவரது தலைமையில் தான் அ.தி.மு.க.வினர் அணி வகுப்பார்கள். எங்களிடம் தற்போது வேறு எந்த திட்டமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறும். ஆனால் கட்சியின் தலைமை பொறுப்பை தினகரனே ஏற்று நடத்துவார். இதில் எந்த மாற்றமும் இல்லை.

அதிமுக வலுப்பெறும்
தற்போது டெல்லியில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் மேலும் பல முன்னணி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் சந்திக்க தயாராக உள்ளனர். டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.தி.மு.க. மேலும் வலுப்பெறும்." என்று கூறியுள்ளார்.

தினகரனுக்கு ஆதரவு
அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேலின் மன நிலையில்தான் அமைச்சர்கள் சிலரைத் தவிர எல்லோரும் தினகரன் ஆதரவில் இருக்கிறார்கள். அதனால் ஜெயக்குமார் போன்று தினகரனுக்கு எதிராகப் பேசிய அமைச்சர்கள் உதறலில் இருக்கிறார்கள்.

விரைவில் அமைச்சரவை மாற்றம்?
தினகரனை விமர்சித்த அமைச்சர்களை மற்றும் முடிவில் தினகரன் இருக்கிறார் என்றும், அதற்கான முன்னோட்டமே வெற்றிவேல் கண்டனம் என்றும் அதிமுகவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சசிகலாவை தினகரன் சந்தித்த பிறகு அமைச்சரவை மாற்றம் வரும் என்றும் கூறப்படுகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications