For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சக்கணக்கில் பணத்தைக் குவித்த தினகரன் குரூப்.. ஆனா ஒரு பைசா சிக்கலை.. ஏன் தெரியுமா?

டிடிவி தினகரனின் தில்லாலங்கடி வியூகத்தால்தான் ஆர்கே நகரில் எங்குமே லட்சக்கணக்கில் பணம் பிடிபடாமல் இருக்கிறதாம். அந்த அளவுக்கு ஸ்கெட்ச் போட்டு பணப்பட்டுவாடா செய்துள்ளனராம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்தாலும் எங்கேயும் இதுவரை லட்சக்கணக்கில் கூட பணம் பிடிபடவே இல்லை.. இதுதான் தினகரனின் தில்லாலங்கடி வியூகம் என காலரை தூக்கிவிடுகிறது அடியாட்கள் கூட்டம்.

தினகரன் கோஷ்டி கத்தை கத்தையாக பணம் கொடுக்கிறது.. அங்கே பிடிச்சிட்டோம்... இங்கே சிக்கிட்டாங்க... கொத்து கொத்தா மாட்டிகிட்டாங்கா என்ற குரல்கள் மட்டும் கேட்கிறது... ஆனால் எங்கேயும் இத்தனை லட்சம் பிடிபட்டது என்ற தகவல்தான் இல்லை.

நூதன வழிகள்

நூதன வழிகள்

இது எப்படி சாத்தியம் என விசாரித்த போது கிடைத்த தகவல்கள்தான் பகீர் ரகம். ஆமாம் தினகரனைப் பொறுத்தவரையில் பணத்தை வாரி இறைப்பது என முடிவு செய்தாகிவிட்டாயிற்று.. அதை லாவகமாக கொடுக்க வேண்டுமே என ரூம் போட்டு யோசித்துதான் இருக்கிற அத்தனை நூதன வழிகளையும் கையிலெடுத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் ப்ளான்

இப்படித்தான் ப்ளான்

அதிலும் கூட தமது அடியாட்கள் எவரிடமும் ரூ20,000-க்கும் அதிகமாக கொடுப்பது இல்லையாம்... சிக்கினால் கொஞ்சமா சிக்கட்டும் என்பதற்காக 100-க்கும் அதிகமான வெளியூர் நபர்கள் மூலம் 15,000, 20,000 ரூபாய் என பிரித்து கொடுத்து பட்டுவாடா செய்ய வைத்திருக்கிறார் தினகரன்.

லட்சங்கள் பிடிபடவே இல்லை

லட்சங்கள் பிடிபடவே இல்லை

இதனால்தான் ஆர்கே நகர் தொகுதியில் இதுவரை மொத்தமாக லட்சக்கணக்கில் எந்த ஒரு இடத்திலும் பணம் பிடிபடவே இல்லையாம்.. இதுதான் எங்கள் 'மக்கள் செல்வரின்' தில்லாலங்கடி வியூகம் என கண்சிமிட்டுகிறது தினகரன் கோஷ்டி.

அலறும் எதிர்க்கட்சிகள்

அலறும் எதிர்க்கட்சிகள்

தினகரனின் இந்த வியூகம் எதிர்க்கட்சிகளை அலற வைத்துள்ளதாம்... இருந்தபோதும் தினகரன் மீது தொடர்ந்து புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு தட்டி விட்டு கொண்டே இருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

English summary
ADMK (Amma) Candidate TTV Dinakaran implementing the new strategy for money distributing to voters in RK Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X