மதுரையோடு போச்சே தினகரனின் பேச்சு... தேனி பொதுக்கூட்டமும் கேன்சல்!
அதிமுக அணிகள் இணைந்ததால் பாதிப்பில்லை கட்சி தங்கள் வசம் தான் உள்ளது என்று சொல்லி வரும் தினகரன் அடுத்தடுத்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை ரத்து செய்து வருகிறார்.
சென்னை : டிடிவி. தினகரன் தலைமையில் தேனியில் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் தலைமையிலான அரசில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவி கொடுத்து இரண்டு அணிகளும் இணைந்துவிட்டன. ஏறத்தாழ கட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், ஆட்சி எடப்பாடி பழனிசாம தலைமையில் என்று அறிவிக்கப்படாத ஒப்பந்தம் போல பதவிகளும், பொறுப்புகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் தாங்கள் தான் அதிமுக என்று தினகரன் தரப்பு தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இதுவரை தினகரன் கட்சி அலுவலகம் சென்று கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை வெளிப்படையாக நடத்தவில்லை. இந்நிலையில் தனக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்கும் விதமாக ஆகஸ்ட் 14ம் தேதி மதுரை மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தது. இதற்கு தினகரன் தரப்பில் இருந்து ஏராளமான கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

மார் தட்டிய சம்பத்
இந்த கூட்டத்தை வைத்தே தினகரனுக்கு மக்கள், தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதே போன்று வடசென்னை, தேனியில் நடக்கும் கூட்டத்திலும் மக்கள் வெள்ளத்தை பார்க்க முடியும் என்று நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.

வடசென்னை கூட்டம் ஒத்திவைப்பு
ஆனால் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் தினகரன் அணி நாளை வடசென்னையில் ஏற்பாடு செய்திருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தினகரனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

தேனி கூட்டமும் ரத்து
இந்நிலையில் இன்று தேனியில் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க இருந்த பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தினகரன் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்துள்ள நிலையில் பலமாக செயல்பட வேண்டிய நிலையில் ஏன் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று குழம்பிப் போயுள்ளனர் தொண்டர்கள்.

சந்தேகம்
அணிகள் இணைப்பால் பாதிப்பில்லை என்றாலும் தினகரன் சார்பில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுகிறது. இது அவர்களின் தயக்கத்தை வெளிக்காட்டுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications