புதுவை விண்ட் பிளவர் ரிசார்ட்டுக்கு குஷியாகத் திரும்பிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!
புதுச்சேரி 100 அடி சாலை சன்வே ஹோட்டலில் தங்கிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீண்டும் சொகுசாகத் தங்கியிருந்த விண்ட் பிளவர் ரிசார்ட்டுக்கே திரும்பினர்.
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீண்டும் முன்பு தங்கியிருந்த விண்ட் பிளவர் ரிசார்ட்டுக்கே திரும்பினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை.

இதையடுத்து அவர்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் கொடுத்தனர். தினகரனுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சின்ன வீரானம்பட்டியில் உள்ள பிரமாண்டமான ரிசார்ட்டான விண்ட் பிளவரில் தங்கினர்.
அங்கு எம்.எல்.ஏக்கள் இருக்கும் பொறுப்புகளை மறந்துவிட்டு குழந்தைகள் போல் சீசா விளையாடி மகிழ்ந்து வந்தனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எம்.எல்.ஏவும் மனுஷங்க தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.
இந்நிலையில், விண்ட் பிளவர் ரிசார்ட்டில் அறைகேட்டு பதிவு செய்த நாட்கள் முடிவடைந்தது என கூறி, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சன்வே ஹோட்டலில் தங்கியிருந்தனர். தற்போது மீண்டும் அங்கிருந்து 18 எம்.எல்.ஏக்களும் கிளம்பி விண்ட் பிளவர் ரிசார்ட்டுக்கே திரும்பினர். இதற்காக ரிசார்ட்டில் 22 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் அவர்களை அழைக்கும் வரை ரிசார்ட்டிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications