"குனிந்த தலை நிமிராத சிரிப்பு, மறைமுக சிரிப்பு"... தினகரனுக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ரெஸ்பான்ஸ்!

அதிமுக எம்எல்ஏக்கள் தன்னைப் பார்த்து குனிந்த தலை நிமிராமலும், மறைமுகமாகவும் சிரித்ததாக டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சட்டசபைக்கு வெளியே தினகரன் பரபர பேட்டி- வீடியோ

    சென்னை : சட்டசபையில் தன்னைப் பார்த்து அதிமுக எம்எல்ஏக்கள் குனிந்த தலை நிமிராமலும், மறைமுகமாகவும் சிரித்ததாக ஆர்கே நகர் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் தெரிவித்துள்ளார். ஒரு அர்த்தமான புன்னகையை அமைச்சர்கள் புரிந்தார்கள், என்னுடைய இருக்கையை எட்டிப் பார்த்துவிட்டு குனிந்து கொள்வது என பல கலாட்டாக்கள் நடந்ததாக டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

    சட்டசபைக்கு முதன் முறையாக மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக செல்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம். சட்டசபையில் தினகரன் எப்படி தனித்து செயல்படப் போகிறார் என்ற ஆவல் மறுபுறம் என சட்டசபை கூட்டம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

    ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன, ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் தனி ஆளாக அமர்ந்திருந்து ஆளுநரின் உரை முழுவதையும் கேட்டுவிட்டு, முதல் நாள் சட்டசபை கூட்டத்தில் சிறப்பாக பங்கேற்று வெளியே வந்தார் தினகரன்.

    அதிமுக எம்எல்ஏக்கள் vs தினகரன்

    அதிமுக எம்எல்ஏக்கள் vs தினகரன்

    டிடிவி. தினகரன் ஆளுநர் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்று பட்டியலிட்டார். அதன் பின்னர் அவரிடம் சட்டசபையின் முதல் நாள் அனுபவம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துவிட்டன. ஆனால் நான் பொறுத்திருந்து அனைத்தையும் கேட்டுவிட்டு வரவேண்டும் என்று தான் முழு அவை நடவடிக்கைகளிலும் பங்கேற்றேன். என்றார்.

    குனிந்தபடியே சிரித்தார்கள்

    குனிந்தபடியே சிரித்தார்கள்

    சட்டசபையில் என்னைப் பார்த்ததும் பல எம்எல்ஏக்கள் தலை குனிந்து கொண்டு சிரிக்கிறார்கள். தலைமைக் கழகத்தில் எம்எல்ஏக்கள் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது செவி வழி செய்திக்கு பதில் கொடுக்கக் கூடாது என்று அமைதியாக இருந்தேன்.

    அர்த்தமான சிரிப்பு

    அர்த்தமான சிரிப்பு

    ஆனால் அந்த செய்தியையும் இன்றைய செயல்பாடுகளையும் மனதில் வைத்து பார்க்கிறேன். என்னுடைய வரிசையில் உட்கார்ந்திருந்த 3 உறுப்பினர்கள் என்னைப் பார்த்துவிட்டு தலைகுனிந்து சிரிக்கிறார்கள். எதிர் வரிசையில் அமர்ந்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், என்னைப் பார்த்து மறைமுகமாக சிரித்துக் கொள்கிறார்கள். அர்த்தமான புன்னகையை பலர் புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள், அமைச்சர்கள் பலர் என்னுடைய இருக்கையை எட்டிப்பார்த்துவிட்டு குனிந்து கொள்கிறார்கள்.

    கைகட்டி அமர்ந்திருந்தார்கள்

    கைகட்டி அமர்ந்திருந்தார்கள்

    பலர் நான் இருக்கும் பக்கம் கூட திரும்பவில்லை, அப்படியே கை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். எம்எல்ஏக்கள் சிலர் வெளிநடப்பு செய்துவிட்டதால், எதிர் வரிசையில் இருந்தவர்கள் தெளிவாகத் தெரிந்தார்கள், அவர்கள் என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்த படியே மேஜையை தட்டிக் கொண்டிருந்தனர் என்று புன்னகைத்தபடியே தினகரன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+