முதல்வராகும் ஆசைல்லாம் எனக்கில்லை... "தியாகிகளில்" ஒருவரைத்தான் முதல்வராக்குவேன்.. டிடிவி தினகரன்
முதல்வராகும் ஆசை எனக்கு கிடையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

தஞ்சை: முதல்வராகும் ஆசை எனக்கு கிடையாது. எனக்காக தங்கள் பதவியை தியாகம் செய்த ஒருவரைத்தான் முதல்வராக தேர்வு செய்வேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கதிராமங்கலம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் அய்யனார் திடலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் நீடிக்கிறது.
அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றைய தினம் 264-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு திரும்பி செல்லும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அறிவிப்பு
இதனிடையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் , தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் இப்போது செயல்படுத்தப்படவில்லை. நெடுவாசலில் ஹைட்கோ கார்பன் திட்டமும் மாநில அரசு, சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தால் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆறுதல்
இந்நிலையில் இன்று தினகரன் கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பொதுமக்களும் தங்கள் தரப்பு நியாயங்களை டிடிவி தினகரனிடம் தெரிவித்தனர்.

18 பேரில் ஒருவர்தான்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறுகையில் முதல்வராகும் ஆசை எனக்கில்லை. எனக்காக பதவியை தியாகம் செய்த 18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன் என்றார் அவர். தினகரன், சசிகலாவை ஒதுக்கியதற்காக எடப்பாடி அணிக்கு எதிராக செயல்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவரைத்தான் தினகரன் முதல்வராக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications