மக்கள் துயரப்படும் போது ரூ.1 லட்சம் ஊதியம் எனக்கு வேண்டாம்... தினகரன் அதிரடி
எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் என்று தினகரன் தெரிவித்தார்.
சென்னை: தமிழக அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
எரிப்பொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களை கூறி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால் மக்கள் அல்லப்படுகின்றனர்.

ஒரேடியாக 66 சதவீதம் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொண்டனர்.
எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது.
மக்கள் தலையில் சுமையை சுமத்திவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அப்படிப்பட்ட ஊதிய உயர்வே எனக்கு வேண்டாம் , அதை நான் பெறப்போவதும் இல்லை.
உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும். நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை அரசு வஞ்சித்துள்ளது என்றார் டிடிவி தினகரன்.
எம்எல்ஏக்களுக்கான ஊதிய உயர்வு மசோதா கடந்த முறை கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரின்போதுதான் தாக்கல் செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications