ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது சசிகலாதான்.. இன்டர்போல் விசாரணைக்கே தயார்.. அதிரடி காட்டும் டிடிவி!
ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது சசிகலாதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது சசிகலாதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் ஜெயலலிதா மரணம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாகவும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலா வீடியோ எடுத்தார்
சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா அவரை வீடியோ எடுத்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நைட்டியுடன் இருந்தார்
அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டியுடன் இருந்ததால் அதை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது அந்த வீடியோவை வெளியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இன்டர்போல் விசாரணைக்கு தயார்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ மட்டும் அல்ல இன்டர்போல் போலீஸ் விசாரித்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிறந்த நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

ஜெ. அனுமதியுடன் வீடியோ
மருத்துவமனையில் சசிகலா ஜெயலலிதான் அனுமதியுடன் அவரை வீடியோ எடுத்தார் என்றும் அவர் கூறினார். மேலும் ஆர்கே நகர் தேர்தலின் போது அதனை வெளியிட சசிகலா மறுத்ததாகவும் மாறாக நீதிவிசாரணையின் போது அந்த வீடியோக் காட்சிகளை வெளியிடலாம் என கூறியதாகவும் தினகரன் தெரிவவித்துள்ளார்.

நைட்டி உடையில் டிவி பார்த்த ஜெ.
நைட்டியில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போன்ற வீடியோ இருப்பதாகவும் புதிய தகவலை தினகரன் கூறினார். மேலும் சிசிடிவி காட்சிகளை அப்பல்லோ மருத்துவமனையில்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். விசாரணை நடத்தினால் முதலில் சிக்குவது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

எடைகுறைந்த ஜெயலலிதா
மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா அதிக எடையிழந்து காணப்பட்டதாகவும் அவர் கூறினார். எடை குறைவால் நைட்டி லூசாக இருந்ததால் அந்த வீடியோக் காட்சிகள் வெளியிடப்படவில்லை என்றும் தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications