துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது- டிடிவி தினகரன்
துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். இந்த கூட்டத் தொடரின்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசப்பட்டது.
அப்போது முதல்வர் ஒரு நீண்ட அறிக்கையை வாசித்து தூத்துக்குடி மக்களை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து திமுக வெளிநடப்பு செய்தது.

சமூக விரோதிகள்
டிடிவி தினகரன் சட்டசபைக்கு வெளியே பேசுகையில் சமூக விரோதிகள் நுழைந்ததை பார்க்காமல் தூங்கிவிட்டது அரசு. துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது. மக்கள் இடத்திலிருந்துதானே எதையும் சொல்ல வேண்டும்.

சமூகவிரோதிகள்
துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொல்லாமல் எல்லாரும் கண்ணை மூடி படுத்துக் கிடக்கின்றனர் என்றா சொல்ல முடியும், சமூக விரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

ஜெ. இருந்திருந்தால்
காவல்துறை துணையின்றி அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு போக முடியுமா. புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ காட்டி வருகிறார். ஜெயலலிதா வழியில் ஆட்சி என்று கூற அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் 13 பேர் பலியாகியிருந்திருப்பரா.

ஆலையை மூடி
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாங்கள் அசந்திருந்த நேரம் பார்த்து டிடிவி ஜெயித்துவிட்டார் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். அதன்படி இந்த காவல் துறை அசந்திருந்ததா. துப்பாக்கிச் சூட்டுக்கு அரசின் இயலாமையே காரணம். போராட்டத்துக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்க வேண்டியதுதானே. 13 பேரை காவு வாங்கிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுகின்றனர் என்று தினகரன் தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications